பேருந்து பணியாளர்கள் , 50 % பேர் பணிக்கு வர வேண்டும் !! சென்னை மாநகர மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக , 3 மாத இடைவெளிக்கு பின்னர் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 50% பணியாளர்கள் பணிக்கு வர சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகர மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ; நமது மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3584 பேருந்துகள் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்றன.
சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளதால் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளின் HFC மற்றும் FC ஜூன் மாதம் காலாவதியாகிறது.
எனவே, மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்ய Fitness Certificate வாங்க வேண்டி உள்ளதால் MTC(W), FC Unit-கள் மற்றும் RC Unit-களில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டு நாளுக்கு ஒரு முறை (50 % ) உடனடி பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பணியாளர்கள் , கைகளை அடிக்கடி சோப் கொண்டு கழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும் , பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் , என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Newstm.in
.png)