ஒரே நாளில் 50 போலீசார் பணியிடமாற்றம்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றிவரும் காவலர், தலைமை காவலர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என 50 பேர் ஒரே நாளில் மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அவரவருக்கு மாற்றப்பட்டுள்ள காவல் நிலையங்களில் உடனடியாக பணியில் சேர்ந்துகொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.