1. Home
  2. தமிழ்நாடு

கொடூரம்! 50க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!!


மதுரை அருகே 50க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் தொல்லை ஆங்காங்கே அதிகம் இருக்கிறது. கேரளா போன்ற மாநிலங்களில் தெருநாய்க்கு பயந்து துப்பாக்கி ஏந்தி சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளது. குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக தெரு நாய்கள் விளங்குகின்றன.

ஆனால் அதற்காக அவற்றை விஷம் வைத்து கொல்வது கொடுமையிலும் கொடுமை. அதைப்போன்ற சம்பவம் தான் மதுரை அருகே நடந்துள்ளது. உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கொடூரம்! 50க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!!

மலை அடிவாரப் பகுதியான இந்த கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் வருவதால், பாதுகாப்பிற்காக வீடுகள் தோறும் நாய்கள் வளர்ப்பது வழக்கம். இந்நிலையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றதாக உரிமையாளர்கள் குற்றசாட்டுகின்றனர்.

உசிலம்பட்டி அருகே கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபடி, நரியம்பட்டி கிராமங்களில் நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது. கொள்ளை கும்பல் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு நாய்களை கொன்றுள்ளனரா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like