50% இட ஒதுக்கீடுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

50% இட ஒதுக்கீடுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி..!
X

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து கார்த்திகேயன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்நிலையில், தமிழ்நாட்டில் நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

15 நாட்களில் மாணவர் சேர்க்கையை நடத்தவும், 16 வது நாள் எத்தனை இடங்கள் நிரப்பாமல் உள்ளதோ அதனை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story
Share it