1. Home
  2. தமிழ்நாடு

5 பதக்கங்கள் வென்ற பிரபல நடிகரின் மகன்!!

5 பதக்கங்கள் வென்ற பிரபல நடிகரின் மகன்!!

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், 5 தங்க பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா 2023 தேசிய அளவிலான போட்டிகளில், வேதாந்த் மகாராஷ்டிர அணி சார்பில் பங்கேற்றார். அதில் 100 மீ, 200 மீ, மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

400 மற்றும் 800 மீட்டர் பிரிவில் வேதாந்திற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. மகனின் வெற்றியை நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். கடவுள் அருளால் பதக்கம் கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.


5 பதக்கங்கள் வென்ற பிரபல நடிகரின் மகன்!!

17 வயதாகும் வேதாந்த், டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு 6 மாதங்கள் துபாயில் பயிற்சி அளிக்கப்பட்டது.

கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் அபெக்சா பெர்னான்ஸ் 6 தங்கம், 1 வெள்ளி பதக்கத்தையும், வேதாந்த் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.



newstm.in

Trending News

Latest News

You May Like