1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைனில் நடந்த சர்வதேச கராத்தே கட்டா சாம்பியன்ஷிப்... தங்கம் வென்ற 5 வயது இந்திய சிறுமி !

ஆன்லைனில் நடந்த சர்வதேச கராத்தே கட்டா சாம்பியன்ஷிப்... தங்கம் வென்ற 5 வயது இந்திய சிறுமி !


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு உலகம் முடங்கிபோயிருந்தது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன. அதுவும் காலி மைதானங்களுடன்.

இங்கிலாந்து - பாகிஸ்தான், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஓபன் டென்னிஸ், கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். அதேநேரத்தில் ஐபிஎல் போட்டியும் நடக்க உள்ளது.

அதேநேரத்தில் ஒரே நேரத்தில் வீரர், வீராங்கனைகளை அழைக்க முடியாததால் ஆன்லைன் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சர்வதேச அளவிலான இ கராத்தே கட்டா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 

இதில் ஐந்து வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் இந்தியாவில் இருந்து சண்டீகரை சேர்ந்த சிறுமி அன்வேஷா ஸ்பெஹியா கலந்துகொண்டார். இப்போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், சிறுமி அன்வேஷா தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். 
 
5 வயதிலேயே சர்வதேச அளவிலான கராத்தே கட்டா போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்ற சிறுமி அன்வேஷாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like