சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமி தங்கம் வென்று சாதனை!!

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான இன்லைன் ஸ்பீட் 200 மீட்டர் சுற்றின் இறுதி போட்டியில் 4 பேர் பலப்பரீட்சை நடத்தினர். அதில் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுமி தர்ஷிகா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதேப்போல 200 மீட்டர் ஒருநபர் சுற்று இறுதி ஆட்டத்தில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். கார்த்திக், மகேஷ் ஆகியோரின் பயிற்சியில் சிறுமி திர்ஷிகா அபாரமாக திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
newstm.in