1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் போட்டியிட்ட 5 பெண் வேட்பாளர்களும் வெற்றி..!

1

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

குறிப்பாக,  தமிழ்நாட்டில் தூத்துக்குடி,  தென்காசி,  தென் சென்னை,  கரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து,  தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,13,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜோதிமணி 5,31,829 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றார்.  மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  தென்காசி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Trending News

Latest News

You May Like