1. Home
  2. தமிழ்நாடு

ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத 5 முக்கியமான விஷயங்கள்..!

1

இஸ்லாமியர்களின் புனித மாதங்களில் மிக முக்கியமான மாதமாக கருதப்படும் ரமலான் மாதம் இந்த ஆண்டு மார்ச் 1 அல்லது மார்ச் 2ம் தேதி துவங்க உள்ளது. இந்த மாதத்தில் கண்டிப்பாக நோன்பு கடைக்கப்பிடிக்க வேண்டும் என்பது இஸ்லாம் சொல்லும் 5 முக்கியமான கடமைகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. அதே போல் புனித ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் என்றும் சில விஷயங்கள் உள்ளன. இவற்றை தவறாமல் ஒவ்வொரு இஸ்லாமியரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

1. நோன்பு துவங்குவதற்கு முன் சாப்பிடப்படும் உணவான ஷெஹ்ரியில் அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலை தரக் கூடிய வகையிலான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. மாலையில் இஃப்தாரின் போது நோன்பை நிறைவு செய்கையில் பேரீச்சம் பழம் மற்றும் தண்ணீர் சாப்பிட வேண்டும். இதையே நபிகள் பெருமனார் வலியுறுத்தி உள்ளார். பேரீச்சம்பழம் உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தரக் கூடியது என்பதாலும், தண்ணீர் உடலில் நீர்சத்தை பாதுகாக்கக் கூடியது என்பதாலும் அவற்றை சாப்பிட்ட பிறகே மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

3. குரோனில் கூறப்பட்டுள்ளதன் படி, வழக்கமான மாதங்களை விட ரமலான் மாதத்தில் இறை வழிபாட்டினை அதிகப்படுத்த வேண்டும். இந்த மாதத்தில் குரோன் முழுவதையும் படித்து முடித்து விட முயற்சி செய்ய வேண்டும்.

4. ரமலான் மாதம் கருணையை ஊக்குவிக்கும் மாதமாகும். அதனால் ஏழை மக்களுக்கு இந்த மாதத்தில் அவர்களுக்கு தேவையான பொருட்களை தானமாக அளிப்பதால் இறை ஆசிகள் அதிகரிக்கும். வசதி இல்லாதவர்களுக்கு இஃப்தார் உணவுகளையும் கொடுத்து உதவலாம்.

5. ரமலான் மாதத்தில் வெறும் உணவு, தண்ணீர் ஆகியவற்றை மட்டும் தவிர்ப்பதுடன் நம்முடைய உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்களிடம் கோபம், விவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காத்து, பொறுமையாக இருக்க வேண்டும். கருணையையும், நல்லொழுக்கங்களையும் கடைபிடிப்பது அவசியம்.

ரமலான் நோன்பின் போது செய்யக் கூடாத 5 விஷயங்கள் :

1. நோம்பு துவங்குவதற்கு முன் சாப்பிட வேண்டிய ஷெஹ்ரி தவிர்க்கக் கூடாது. இது நாள் முழுவதும் நோன்பு கடைபிடிப்பதை சிக்கலாக்கி,உடலை பலவீனமாகவும் நீர்சத்து இல்லாமலும் மாற்றி விடும். பசி இல்லை என்றாலும் கூட எளிமையாக ஏதாவது சாப்பிட்டு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. இஃப்தாரின் போது அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கடினமான, எண்ணெய் நிறைந்த அல்லது இனிப்பான உணவுகளை உடனடியாக நோன்பு முடிக்கும் போது சாப்பிடுவதால் வயிற்றில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படலாம். சத்தான உணவுகளை தேர்வு செய்து வழங்க சாப்பிட வேண்டும்.


குரான் சொல்லும் ரமலான் கட்டுப்பாடுகள் :

3. ரமலான் மாதத்தில் சுய மேம்பாடு, இறை எண்ணங்களை அதிகரிப்பதற்காக மட்டுமே காலத்தை பயன்படுத்த வேண்டும். அதிகமாக சோஷியல் மீடியா, டிவி போன்ற தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.

4. புறம் பேசுவதை தவிர்க்க வேண்டும். பொய் பேசுவது, விவாதிப்பது, கடுமையான சொற்களை பயன்படுத்துவது போன்றவற்றை ரமலான் மாதத்தில் தவிர்க்க வேண்டும்.

5. மக்ரீப் மற்றும் தரவீஹ் செய்வதற்கு எப்போதும் காலம் தாழ்த்தக் கூடாது. மாலையில் நோன்பு திறக்கும் போது எந்த காரணத்திற்காகவும் காலம் தாழ்த்தாமல், வழிபாட்டினை செய்ய வேண்டும்.

Trending News

Latest News

You May Like