தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில்,
முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீத தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது. அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்! 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.
— M.K.Stalin (@mkstalin) June 14, 2025
அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த… https://t.co/01rG9Q24cD