1. Home
  2. தமிழ்நாடு

5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!

1

தமிழகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பிரிவு டிஜிபி ராஜீவ் குமார், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஊர்க்காவல் படை டிஜிபியாக பதவி வகித்த வன்னிய பெருமாள், சென்னை ரயில்வே டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக இருந்த மல்லிகா, சென்னை மனித உரிமைகள் ஆணைய ஐஜியாகவும், சென்னை ரயில்வே டிஐஜியாக இருந்த அபிஷேக் தீக்ஷித் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பணியிட மாற்றம் பெற்றிருக்கிறார்.

மேலும், லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்பி முத்தமிழ் செல்வி குற்ற விசாரணை பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார்.

1

Trending News

Latest News

You May Like