1. Home
  2. தமிழ்நாடு

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

1

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பின் படி கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலராக உள்ள பி.அமுதா கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக உள்ள அதுல் ஆனந்த், கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மத்திய அரசுப்பணியில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலாளராக உள்ள சுதீப் ஜெயின், கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலராக உள்ள காகர்லா உஷா கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

வேளாண் துறை செயலராக உள்ள அபூர்வா ஆகியோர், செயலர் நிலையில் இருந்து தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் கூடுதல் தலைமைச் செயலர்களாகியுள்ளனர்.

இதையடுத்து, வருவாய்த் துறை செயலர், குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர், வேளாண் துறை செயலர் பதவிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க முதலமைச்சரின் தனிச் செயலாளர் அனு ஜார்ஜ் 136 நாள்கள் விடுப்பில் செல்வதால் முதலமைச்சரின் செயலர்களின் துறைகளை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சரின் இணைச் செயலாளர் லட்சுமிபதி ஐ.ஏ.எஸ்-க்கு சுற்றுசூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தனிச் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like