1. Home
  2. தமிழ்நாடு

டெங்கு பரவல் – 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

டெங்கு பரவல் – 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்த நிலையில் அசாமில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அசாமில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில், திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


டெங்கு பரவல் – 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாக திபு நகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது.

இன்று முதல் வருகிற 12ஆம் தேதி வரை விடுமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு பரவலை தடுக்க 10 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 20 ஆயிரம் பேரை கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

மொத்தம் 1,422 வீடுகளில் நடந்த சோதனையில் காய்ச்சல் பாதிப்பு உள்ள 74 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like