கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு பேருந்துகளும் வாங்கவில்லை - அமைச்சர் சிவசங்கர்..!!
சென்னை சிவானந்த சாலையில் உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் சிஐடியு தலைவர் சவுந்தராசன் தலைமையில் பொது போக்குவரத்து மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் என்ஜின் ஆப் தமிழ்நாடு என்ற ஆவண படமும் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு என்ஜின் ஆப் தமிழ்நாடு என்ற ஆவண படத்தை வெளியிட்டார். பின்பு ஆவணப் படத்தை இயக்கிய குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சிஐடியு சார்பாக நடைபெற்ற இந்த பொது போக்குவரத்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏழை எளிய மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆவணப்படம் வெளிட்டப்பட்டது. சென்னையில் 100 மின்சார பேருந்துகளை வங்க உள்ளோம். அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கு வாங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு பேருந்துகளும் வாங்கவில்லை, 2006 -2011 திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் வாங்கப்பட்ட அளவுக்கு பேருந்து கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் வாங்கப்படவில்லை.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு பேருந்துகள் பராமரிக்காமல் இருந்தது. இப்பொழுது தான் அது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் தீர்வு காணப்படுகிறது. ஓலா, ஊபர் போன்ற தனியார் செயலி மூலம் இயக்கப்படும் போக்குவரத்து குறித்து ஏற்கனவே தொழிற்சங்கங்கள் முறையிட்டுள்ளனர். அது குறித்து அரசு ஆலோசித்து விரைவில் தீர்வு காணப்படும்" எனக் கூறினார்.
.png)