1. Home
  2. தமிழ்நாடு

லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி : மும்பை தோல்வி..!!


நேற்று நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தீபக் ஹூடா மற்றும் டி காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஹூடா 5 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து களம் இறங்கிய பிரேரக் மன்கட் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டி காக்கும் 16 ரன்னில் வீழ்ந்தார். இதனால் லக்னோ 35 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து கேப்டன் க்ருணால் பாண்ட்யாவும், மார்கஸ் ஸ்டோய்னிசும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த க்ருணால் 42 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இஷான் கிஷன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி அரைசதத்தைக் கடந்தார். மறுபுறம் ரோகித் சர்மா 37 ரன்கள் குவித்த நிலையில், ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் போல்ட் ஆனார். இஷான் கிஷன் 59 ரன்கள் குவித்த நிலையில், ரவிபிஷ்னோய் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதி ஓவர்களில் டிம் டேவிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி 32 ரன்கள் குவித்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Trending News

Latest News

You May Like