5 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

5 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
X

தமிழகத்தில், பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

2022 - 2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், 'பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.


அதன்படி, மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை - அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் - அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ள.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மையங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Next Story
Share it