1. Home
  2. தமிழ்நாடு

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

6ஆவது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 13 இடங்களில் 5ஜி சேவை அறிமுப்படுத்தப்பட்டுள்ளது.

5ஜி தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர்.


5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!


முன்னதாக ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன் ஆகிய அரங்குகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் குறித்து பிரதமரிடம் விளக்கி டெமோ காட்டினார்.

அதேபோல், ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களும் தங்கள் சேவையின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கின. பின்னர் நாட்டில் முதல்கட்டமாக பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.


இன்றைய தினம் இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினம் என்றும் டிஜிட்டல் இந்தியாவின் அடித்தளம் தொலைத்தொடர்பு துறை மூலம் தான் அமைக்கப்படுகிறது என அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like