1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்த 4வது மாநிலம் !!

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்த 4வது மாநிலம் !!


இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.இந்நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

கேரளாவில், கொரோனா நோய் தொற்று பரவல் தீவிரமடைந்தது கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோய் தொற்று, கேரளாவில் வேகம் எடுத்துள்ளதால், ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுமா என்று அதிகாரிகள் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், கேரளாவில் நேற்று புதிதாக 10,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 9,258 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதன்மூலம் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 4வது மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தான் இப்படியொரு மோசமான சாதனையை படைத்திருந்தன.

அதுமட்டும் இல்லாமல், கேரளாவில் கொரோனா அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக், தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், வேளாண்மை துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தற்போது மின்சார துறை அமைச்சர் மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது மக்களிடம் மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like