இன்று 48 ஏழை ஜோடிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி தலைமையில் திருமணம்..!
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வடசென்னை சுங்கச்சாவடியில் உள்ள தங்கம் மாளிகையில் நடைபெறுகிறது.
48 ஜோடிகளின் மண விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைக்கிறார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்து கூறுகிறார். திருமண விழாவில் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெயதாஸ் பாண்டியன், சுரேஷ், செந்தில் குமார், ஜெயராமன், முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். அமைச்சர்கள் பொன்முடி, பி.கே. சேகர்பாபு, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.எல்.ஏ.க்கள், ஜே.ஜே. எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விழாவில் நிர்வாகிகள் இளைய அருணா, மனோகரன், இரா.கருணாநிதி, மதிவாணன், மருதுகணேசன், நரேந்திரன், வெற்றி வீரன், எஸ்.ஆர்.கமலக்கண்ணன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் வட்ட செயலாளர் என்.எம். கதிரேசன் நன்றி கூறுகிறார்.