1. Home
  2. தமிழ்நாடு

தறி கெட்டு ஓடிய டேங்கர் லாரி: 48 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதல்..!

தறி கெட்டு ஓடிய டேங்கர் லாரி: 48 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதல்..!

மும்பை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு இந்த பாலத்தில் புனேயை நோக்கி டேங்கர் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை டிரைவர் நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் பிரேக் பிடிக்காமல் அந்த லாரி தறி கெட்டு ஓடி முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது. அடுத்தடுத்து பல வாகனங்களை அந்த லாரி இடித்து தள்ளியது.

அந்த லாரி மோதிய வேகத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று வேகமாக மோதின. இதனால் அந்த வாகனங்களில் இருந்தவர்கள் அலறினார்கள். மொத்தம் 48 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி நொறுங்கின. டேங்கர் லாரி மோதிய வாகனங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. மற்ற வாகனங்கள் பின்பகுதியிலும், முன் பகுதியிலும் நொறுங்கி ஒன்றன் மீது ஒன்று சாய்ந்த நிலையில் இருந்தன.


இதன் காரணமாக நீண்ட தொலைவிற்கு பாலத்தின் இறக்கத்தில் வாகனங்கள் மோதி நின்றன. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட வில்லை. ஆனால் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புனேயின் பல்வேறு பகுதியில் இருந்தும் தீயணைப்பு படை வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்த 30 பேரில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் நொறுங்கிய 48 வாகனங்களில் 30 கார்கள் ஆகும், 2 ஆட்டோ, மற்றவை வேன்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like