திரிபுராவில் எய்ட்ஸ் நோய்க்கு பள்ளிக், கல்லூரி மாணவர்கள் 47 பேர் பலி..!
திரிபுராவில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஹெச்ஐவி தொற்று பரவியுள்ளது. போதை பொருள் புழக்கம் அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த எய்ட்ஸ் தொற்று பரவல் அதனை உறுதி செய்துள்ளது.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களை சேர்ந்த மாணவர்களிடையே ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதுவே அவர்களுக்கு விரைவாக ஹெச்ஐவி பரவ காரணமாக இருந்துள்ளது. பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒரே ஊசியை பயன்படுத்தி போதை ஏற்றியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
மொத்தம் 828 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் தற்போது உயிருடன் இல்லை. இவர்களில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர். ஆனால் அவர்களில் பலர் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
2024 மே மாத நிலவரப்படி, திரிபுராவின் ஏஆர்டி மையங்களில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக 8,729 நபர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. ஹெச்ஐவி தொற்றை தடுக்கும் வகையில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.png)