1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி ரூ.450 கோடி ஒதுக்கீடு..!

1

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நேற்று 22 மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,532 கோடியை வழங்கியுள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

22 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் அதிகபட்சமாக மராட்டியத்திற்கு ரூ.1,420.80 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.712 கோடியும், ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 707.60 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி பேரிடர்காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும். அதேபோல் பேரிடர் காலத்தை எதிர்கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like