450 படங்களில் நடித்த பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் காலமானார்..!!

தமிழ் , பிரஞ்ச் சினிமா உள்பட 450 படங்களில் நடித்த பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுகோயா காலமானார். அவருக்கு வயது 76. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவர் இன்று மதியம் 1.05 மணியளவில் அவர் காலமானார்.
மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 3 மணி முதல் கோழிக்கோடு டவுன் ஹாலில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை கண்ணாம்பரம் காபர்ஸ்தானில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
Also Read - #BREAKING : மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்..!

ராமோஜி ராவ் ஸ்பிகீங், வடக்கு நோக்கி எந்திரம்,saaகோரம், காந்திநகர் 2வது தெரு, சந்தேஷம், ராஜதந்திரம், உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். இன்னத்தே சிந்த விஷயம் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது பெற்றுள்ளார்.