1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் 444 லாரிகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்..!

1

சென்னையில் 444 லாரிகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை வரை 4,227 முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு உள்ளது என்றும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் அனைத்து பகுதிகளிலும் சீரடைந்துள்ளது என்றும் அவ்வாரியம் தெரிவித்தது.

மேலும், சென்னையில் செயல்படும் 74 நிவாரண முகாம்களுக்கும் உணவு தயாரிக்கும் கூடங்களுக்கும் தேவையான குடிநீர் வழங்கப்படுகிறது.

263 இடங்களில்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

மேலும், 116 அதிவேக நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 476 தூர்வாரும் இயந்திரங்கள் மூலம் பிரதான கழிவுநீர்குழாய்களில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. 325 கழிவுநீர் உந்து நிலையங்களில் 179 ஜெனரேட்டர்களை கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கழிவுநீர் அகற்றும்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 45 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன 

Trending News

Latest News

You May Like