நாளை மறுநாள் சென்னையில் 44 புறநகர் ரயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் சென்னை கடற்கரை இடையே 44 புறநகர் ரயில்கள் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 3-ல் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 மின்சார ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 6 மின்சார ரயில்கள் ரத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் மார்ச் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பிற்பகல் 3.30 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில்வே சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை மா.போ.கழகம் முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.