1. Home
  2. தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு 4089 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

1

திருவண்ணாமலை  மகா தீபத்தைக் காண உலகம் முழுவதும் இருந்து சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தரலாம் என   எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.  அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில்  திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  இந்த சிறப்பு பேருந்துகள்  சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உட்பட பல  இடங்களில் இருந்து  இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like