பிரதமரின் மாநிலத்தில் 40,000 பெண்களை காணவில்லை!!
மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போனதாகவும், இதில் 2019ஆம் ஆண்டு 9,268 பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சிலர், காணாமல்போன சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்தி சென்று வெளி மாநிலங்களில் விற்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர். இது போன்ற வழக்குகளில் போலீஸார் மெத்தனமாக செயல்படுவதே சம்பவம் அதிகரிக்க காரணம் என்றும் கூறியுள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிரென் பங்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தங்கள் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 பெண்கள் காணாமல் போனதை விட, கேரளாவில் பெண்கள் காணாமல் போனது பற்றி அதிகம் பேசுகிறார்கள் என விமர்சித்துள்ளார்.
newstm.in