திருவண்ணாமலையில்.. 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

திருவண்ணாமலை அருகே குடோனில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேசன் அரிசி மூட்டைகளை மாவட்ட விநியோக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள கோவிந்தராஜ் நகரில் உள்ள ஒரு குடோனில் கள்ளத்தனமாக ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விநியோக அலுவலர் ஹரிதாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற மாவட்ட விநியோக அலுவலர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேசன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி, பறிமுதல் செய்தார்.
மேலும், அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட கோதுமை முட்டைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசியில் அரைக்கப்பட்ட கோழித்தீவனம் உள்ளிட்டவையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, குடோன் உரிமையாளர் ஏழுமலை என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.