1. Home
  2. தமிழ்நாடு

4 யூடியூப் பிரபலங்கள் போக்சோவில் கைது..!

Q

ஈரோட்டை சேர்ந்த யூடியூபர் கார்த்திக், தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்பவருடன் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு நவம்பர் மாதம் வந்தார். அங்கு திவ்யா இரு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கார்த்திக் கடந்த வாரம் விருதுநகர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரை சேர்ந்த யூடியூபர் சித்ரா (48), சென்னை டிஜிபி அலுவலகத்தில் திவ்யா குழந்தைகளை அடைத்து வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்து, அது குறித்த வீடியோ உள்ளதாக பேட்டி அளித்தார். இது குறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அந்த விசாரணையில் 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு திவ்யா பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி அளித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் திவ்யா, கார்த்திக், சித்ரா, ஆனந்தராமன் ஆகிய 4 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்: "ஶ்ரீவில்லிபுத்தூரில் கடந்த நவம்பர் திவ்யா மற்றும் கார்த்திக் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களை ரீல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதையடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த திவ்யா, உடந்தையாக இருந்த கார்த்திக், வீடியோ எடுக்க கூறிய சித்ரா, வீடியோ எடுத்த ஆனந்த ராமன் ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்” என்று போலீஸார் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like