தின்பண்டம் வாங்கிக் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கொடூரம் !

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). வெளியூரில் தங்கி பணிபுரிந்து வந்த இவர் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
மேலும் சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். தனது விவசாய நிலத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி தானும் வருவதாக கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டன், சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.
தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கடலை பறிக்கும் பணி நடைபெறுவதால் அங்கு அனைவரும் சென்றுவிட்டதால் வீட்டில் யாரும் இல்லை. இதனால் வீட்டிற்கு அழைத்துச்சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பின்னர் இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த ஜெயங்கொண்டம் போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in