சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்!!

மழை நீர் தேங்கியுள்ள 4 சுரங்கப்பாதைகள் சென்னையில் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கொட்டி தீர்த்த கன மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் மாநகராட்சி சார்பில் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது.
காலையில் மழை ஓய்ந்து இருக்கும் நிலையில் தெருக்களில் மற்றும் சாலைகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது.மழை காரணமாக வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
மழைநீர் தேங்கியுள்ள சுரங்கப்பாதைகளில் உள்ள நீரை பம்ப் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in