1. Home
  2. தமிழ்நாடு

கழிவுநீர் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு...!! தொடரும் அவலம்...

கழிவுநீர் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு...!! தொடரும் அவலம்...


தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். சோமசுந்தரம் என்பவர் தனது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். செப்டிங் டேங்கை சுத்தம் செய்வதால், ஏராளமான பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.

கழிவுநீர் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு...!! தொடரும் அவலம்...

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் செப்டிங் டேங்க் கிளின் செய்யும் போது உயிரிழந்தவர்கள் ஏராளமானோர் என ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு முன்னர் கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை இருவர் சுத்தம் செய்யத் தொடங்கிய உடன் அதிலிருந்து நெடிய வாயு தாக்கி 2 உயிரிழந்தனர். இத்தகை சம்பவங்களுக்கு தீர்வு காணாத வகையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அப்பாவி மக்கள், நிலையை கண்டு அதிர்ச்சியளிக்கிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like