அதிகாலை நடந்த கோர விபத்து : ரயில்வே தண்டவாளத்தில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி! ரயில் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் சென்று கொண்டு இருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கவிழ்ந்த பேருந்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த 28 பேர் படுகாயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்த 28 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து நடந்த சமயத்தில், தண்டவாளத்தில் ரயில்கள் ஏதும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.