1. Home
  2. தமிழ்நாடு

ரஷ்யாவில் இந்திய மருத்துவ மாணவர்கள் 4 பேர் பலி..!

1

மருத்துவ கல்வி படிப்பில் உலக அளவில் ரஷ்யா 8- வது இடத்தை பெற்று திகழ்கிறது. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை ரஷியா கடைபிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா விருப்பமான தேர்வுகளில் முதன்மையாக உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் நடந்துள்ளது. 

அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் ரஷ்ய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். உயிரிழந்த 4 மாணவர்களில் இருவர் பெண்கள். அவர்கள் அனைவருக்கும் 18 முதல் 20 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இவர்கள் அனைவரும் அங்குள்ள வெலிகி நோவ்கோரோட்  நகரின் நோவ்கோரோட் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்துள்ளது. வோல்கோவ் ஆற்றில் மாணவி ஒருவர் முதலில் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் முயற்சியில்  மற்ற 4 பேர் ஆற்றில் இறங்கியுள்ளனர். 

அதில் ஒருவரை அங்கிருந்த உள்ளூர்வாசிகள் மீட்டுள்ளனர். மற்ற அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அவர்களை பிரிந்துள்ள குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

அவர்களுக்கு இந்நேரத்தில் வேண்டிய அனைத்து உதவியையும் வழங்குவோம். பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளது.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 இந்திய மாணவர்களில்  இஷான் அஷ்பக் பிஞ்சாரியும் ஒருவர். அவரும் மற்ற மூவரும் ஆற்றில் மூழ்கிய போது பெற்றோருடன் வீடியோ அழைப்பில் இருந்ததாக குடும்ப உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

மேலும் அவர் கூறுகையில், உயிரிழந்த மாணவர் ஆற்றில் இறங்கிய போது பெற்றோர் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததாகவும் பெற்றோர் வார்த்தை மீறி மாணவர் ஆற்றில் இறங்கி உயிரிழந்ததாக வருத்தத்துடன் தெரிவித்தார்.  

Trending News

Latest News

You May Like