500 சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பிறந்த குழந்தை மீட்பு..!!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சூர்யகலாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கருத்தடை சிகிச்சைக்காக அவர் வேலூர் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத ஒரு பெண், சூர்யகலாவின் குழந்தையை கடத்திச் சென்றுவிட்டார். இதுகுறித்து சூர்யகலாவும் மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் குழந்தையுடன் வெளியேறி திருவண்ணாமலைக்கு செல்லும் பேருந்தில் ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தன.
அவ்வாறு அந்த பேருந்து பயணத்தை தடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், குழந்தயை கடத்தியது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் என்பதை உறுதி செய்தனர். உடனடியாக அந்த பெண் இருந்த காவேரிபாக்கம் பகுதியில் அதிரடியாக நுழைந்த காவல்துரை பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
கடத்தல் சம்பவம் நடந்த 8 மணிநேரத்தில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.