4 நாள் விடுமுறை; அரசு அதிரடி அறிவிப்பு!
வரும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், நவம்பர் 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நவ.1ம் தேதி (தீபாவளிக்கு மறுநாள்) அரசு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.