ரோகித் சர்மா முன் காத்திருக்கும் 4 சவால்கள்..!

உலகக் கோப்பை என்பது மிகப்பெரிய நெருக்கடியை ஒரு வீரருக்கு ஏற்படுத்தும்.அதுவும் கேப்டன் என்றால் சொல்லவே தேவையில்லை. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் கூட தோனி அதிரடியாக விளையாடினார்.
ஆனால் தொடர் தொடங்கியவுடன் தோனியால் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதே போல் ஒரு நிலை ரோகித் சர்மாவுக்கும் ஏற்படலாம். ஆனால் தோனியை போல் ரோகித் சர்மா கீழ் வரிசை வீரர் கிடையாது. தொடக்க வீரர் என்பதால் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமா இல்லையா என்பது ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் தான் இருக்கிறது. அவர் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தால் மட்டுமே நம்மால் பெரிய ஸ்கோரை நினைக்க முடியும். கேப்டன் பொறுப்பையும் ஏற்று பேட்ஸ்மேன் ஆகவும் ரோகித் சர்மா ஜொலிக்க வேண்டும். ரோகித் சர்மாவுக்கு இருக்கும் அடுத்த பிரச்சனை களத்திற்கு ஏற்ப ப்ளேயிங் லெவனை தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு மைதானத்தின் அளவு சிறியதாக இருந்தால் சுழற் பந்துவீச்சாளர்களை இரண்டு பேரை தேர்வு செய்தாலே போதும். இல்லை உதாரணத்திற்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அஸ்வினை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்திய நிலையில் தோனி மைதானத்தின் அளவு ஒரு முனையில் சிறியதாக இருப்பதால் ஸ்ரீ சாந்தை பிளேயிங் லெவனில் சேர்த்தார். இப்படி சூழலுக்கு ஏற்ப உள்ளுணர்வு படி ரோகித் சர்மா செயல்பட வேண்டும்.
ஏற்கனவே நெருக்கடியான சமயத்தில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் கேப்டனாக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார் என்பதால் அவருக்கு நிச்சயமாக அந்த அனுபவம் கை கொடுக்கும். மேலும் டாசை வென்றால் என்ன செய்வது? அணியின் ஸ்கோரை எப்படி கட்டமைப்பது ?முதல் 10 ஓவரில் எவ்வாறு ரன்கள் சேர்ப்பது? பில்டர்களை எப்படி நிறுத்துவது என்ற பல சவால்கள் தற்போது ரோகித் சர்மாவும் காத்திருக்கிறது. பிளேயிங் லெவன் மற்றும் எந்த பேட்ஸ்மேன் எந்த பவுலரால் சமாளிக்க முடியும் போன்ற யுக்தி ஆகியவற்றில் மட்டும் ரோகித் சர்மா கவனம் செலுத்தினால் நிச்சயமாக இந்த உலகக் கோப்பையில் அவரால் சாதிக்க முடியும்.