1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!!


எட்டு விமானங்களில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, துபாய், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இரவு பகலாக சோதனை நடத்தினர்.

அப்போது துபாய், இலங்கை, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 8 பயணிகள் விமானங்களில் வந்த, 20 க்கும் மேற்பட்ட பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை இட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ. 2.29 கோடி மதிப்பில் 4.28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னையில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!!

இதில் இலங்கைப் பெண் பயணிகள் தங்கள் ஆடைகளில் தங்கப் பசைகளையும், தங்க செயின்களையும் மறைத்து வைத்திருந்தனர். அதைப்போல் மற்ற ஆண் பயணிகள் சிலர், நூதனமான முறையில், கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது போலவும், அதற்கு கட்டுகள் போட்டு பேண்ட் டெய்ட் ஒட்டியுள்ளது போலவும் ஒட்டிக்கொண்டு, அதனுள் தங்க பசையான ஸ்டிக்கர்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 8 பயணிகளையும், சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இவர்கள் தனித்தனி விமானங்களில், வேறு வேறு நாடுகளில் இருந்து வந்தாலும், அனைவரும் ஒரே கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like