4 கால்களுடன் கோழிக் குஞ்சு.. ஆச்சரியமாக பார்த்துச் செல்லும் மக்கள்..!

4 கால்களுடன் கோழிக் குஞ்சு.. ஆச்சரியமாக பார்த்துச் செல்லும் மக்கள்..!
X

திருநள்ளாறில், 4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக் குஞ்சை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால மாவட்டம் திருநள்ளாறு பூமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி முருகன். இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் 10-க்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் பொறித்தது.


இதில் ஒரு கோழிக் குஞ்சு மட்டும் வித்தியாசமாக நடந்தது. அதனை கவனித்த போது, அந்த கோழிக் குஞ்சிக்கு 4 கால்கள் இருந்தது. அதாவது 2 கால்கள் பெரிதாகவும், 2 கால்கள் சிறிதாகவும் இருந்தது.

இதைக் கண்டு சக்தி முருகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியது. இதை அறிந்த திரளான பொதுமக்கள் அந்த அதிசய கோழிக் குஞ்சை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Next Story
Share it