1. Home
  2. தமிழ்நாடு

36 ‘பிளமிங்கோ’ பறவைகள் உயிரிழப்பு..!

Q

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எமிரேட்ஸ் விமானம் ‘இகே 508’ நேற்று இரவு 9.18 மணிக்கு பறவைகள் மீது மோதி சேதமடைந்தது. எனினும் அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக மும்பை விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வனத்துறை கூடுதல் தலைமைப் பாதுகாவலர் (சதுப்புநிலப் பாதுகாப்பு பிரிவு) எஸ்.ஒய்.ராமராவ் கூறுகையில், “இந்தப் பகுதியில் 36 பிளமிங்கோக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல பிளமிங்கோக்கள் உயிரிழந்துள்ளனவா என்பதைக் கண்டறிய தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. பிளமிங்கோ பறவைகள் விமானம் மோதி உயிரிழந்துள்ளன.” என்றார்.
சதுப்புநில பாதுகாப்பு பிரிவு துணை பாதுகாவலர் தீபக் காடே கூறுகையில், “விமானம் பறவைகள் மீது மோதியதை விமான நிலைய அதிகாரிகள் எங்களிடம் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் லட்சுமி நகருக்கு (கிழக்கு காட்கோபர் வடக்கு பகுதி) அருகில் நடந்துள்ளது.” என்றார்.
சதுப்புநில பாதுகாப்பு பிரிவு துணை பாதுகாவலர் தீபக் காடே கூறுகையில், “விமானம் பறவைகள் மீது மோதியதை விமான நிலைய அதிகாரிகள் எங்களிடம் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் லட்சுமி நகருக்கு (கிழக்கு காட்கோபர் வடக்கு பகுதி) அருகில் நடந்துள்ளது.” என்றார்.
சதுப்புநில பாதுகாப்பு பிரிவின் வனச்சரக அதிகாரி பிரசாந்த் பகதூர் கூறுகையில், “நான் விமான நிலையத்துக்கு சென்றேன். ஆனால், அவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. பிளமிங்கோக்கள் மீது எமிரேட்ஸ் விமானம் மோதியதாக விமான நிலைய அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகள் எங்களுக்கு தகவல் அளித்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு 8.40 மணி முதல் 8.50 மணிக்குள் நடந்துள்ளது. எங்கள் குழுவினர் இரவு 9.15 மணிக்கு சம்பவ இடத்துக்குச் சென்றது.” என்றார்.
‘வனசக்தி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் டி.ஸ்டாலின் கூறுகையில், “பறவைகள் விமானத்தில் மோதிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சரணாலயம் வழியாக புதிய மின்கம்பிகள் அமைத்துள்ளது பறவைகளுக்கு திசை திருப்பலை ஏற்படுத்துகின்றன. அதற்கு ஒருபோதும் அனுமதி அளித்திருக்கக் கூடாது. மாற்று வழிகள் அதிகம் உள்ளன. மின்பாதைகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பு, சரணாலயங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது வனவிலங்கு வாரியம் மின்வாரியத்திடம் சரணடைந்துவிட்டது.” என்றார்.
விமானம் மோதி ஏராளமான பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்த சம்பவம் பறவைகள் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like