லாக்டவுன் காலத்தில் 350 ஆன்லைன் வகுப்புகள்! உலக சாதனை படைத்த கேரள மாணவி!

லாக்டவுன் காலத்தில் 350 ஆன்லைன் வகுப்புகள்! உலக சாதனை படைத்த கேரள மாணவி!

லாக்டவுன் காலத்தில் 350 ஆன்லைன் வகுப்புகள்! உலக சாதனை படைத்த கேரள மாணவி!
X

கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 90 நாட்களில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கிட்டத்தட்ட 350 ஆன்லைன் கோர்ஸ்களை படித்து வெற்றிகரமாக முடித்து சாதித்துள்ளார்.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கிட்டத்தட்ட 6 மாத காலமாக அமலில் உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரி போன்ற அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலைப் பயன்படுத்தி கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 90 நாட்களில் 350 ஆன்லைன் வகுப்புகளை படித்து முடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஆரத்தி ரெகுநாத், யுனிவர்சல் ரெக்கார்ட் மன்றத்தில் (யுஆர்எஃப்) இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் கேரளாவில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் தற்போது பயோ கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

.

Next Story
Share it