35 ஆண்டு லவ்.. 65 வயதில் காதலியை கரம்பிடித்த காதலன்!!

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஹெப்பாலின் சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் கடந்த 30 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இருவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. குடும்பக் காரணங்களால் அவர்களுக்கிடையில் காதல் பந்தம் உருவாகவே இல்லை. இந்நிலையில், இந்த ஜோடி நேற்று திருமணம் செய்து கொண்டது.
ஜெயம்மாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மா 30 வயதில் இருக்கும்போதே விட்டுசென்று விட்டார். இதன்பிறகு, அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா ஜெயம்மாவை காதலித்து வந்தார்.
ஆனால், அவரின் காதலை ஜெயம்மா ஏற்கவில்லை. தனது காதலை ஏற்காததால் ஜெயம்மாவை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் சிக்கண்ணா இருந்தார். இந்த நிலையில், சிக்கண்ணாவின் காதலை ஏற்று, அவரை திருமணம் செய்ய ஜெயம்மா சம்மதித்தார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சாலுவராயசுவாமி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீனிவாஸ் குருஜியின் ஆசிரமத்தில் இந்த அபூர்வ ஜோடியின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 65 வயதுடைய சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் புது மணமக்களாக புது ஆடை உடுத்தி ஜொலித்தனர். இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, காதலர்கள் திருமணத்தில் இணைந்தனர். 30 வயது காதல், குறையும் வயதில் நிறைவேறியது. மாண்டியா மாவட்டத்தின் மேல் கோட்டையைச் சேர்ந்தவர்கள் இந்த அபூர்வ திருமண விழாவை கண்டுகளித்தனர். புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ அந்த ஊர் மக்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.