1. Home
  2. தமிழ்நாடு

தனியார் பள்ளியில் வாயு கசிவு 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..!!

Q

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியின் 3வது தளத்தில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த நிலையில், மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.காலை 10.30 மணி முதலே கெமிக்கல் வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like