1. Home
  2. தமிழ்நாடு

35 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மணிரத்னம் – கமல்ஹாசன்!!

35 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மணிரத்னம் – கமல்ஹாசன்!!

உலக நாயகன் கமல்ஹாசனை இயக்குநர் மணிரத்னம் 35 ஆண்டுகளுக்கு பிறகு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் நாயகன் படத்திற்கு பிறகு, அதாவது 35 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடத்த நாயகன் படம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் இன்றளவும் உலக அளவில் ரசிகர்களால் பேசப்படும் படமாக உள்ளது.


35 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மணிரத்னம் – கமல்ஹாசன்!!

இந்நிலையில் தற்போது மாஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கமல் ஹாசனின் 234ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


35 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மணிரத்னம் – கமல்ஹாசன்!!

படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.



newstm.in

Trending News

Latest News

You May Like