1. Home
  2. தமிழ்நாடு

ஆதார் அட்டையில் ஏற்பட்ட பிழையால் 32 வயதுடையவர் 125 ஆக பதிவு..!

1

புதுக்காட்டைச் சேர்ந்த 32 வயதான மகேஸ் ராஜ், திருமணமாகி கணவருடன் அதே ஊரில் வசித்து வருகிறார். இவர் அரசின் திட்டங்களை பெறுவதற்கும், பெயர் அடையாளத்துக்கும் ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து மனு அளித்து வந்தார்.

1993-ஆம் ஆண்டு பிறந்த மகேஸுக்கு வயது 32 ஆக உள்ள நிலையில், ஆதார் அட்டையில் இவரது பிறந்த ஆண்டு 1900 என்றும், வயது 125 எனவும் பதிவாகியுள்ளது. இதனால் அரசு திட்டங்களுக்கு, அதிகாரப்பூர்வ அடையாள அட்டையாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

ஆதார் மையங்களில் திருத்தம் செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் கேட்கின்றனர் என்று கூறும் மகேஸ் ராஜ், தனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் ஆதாரில் திருத்தம் செய்ய அலைக்கழிக்கப்படுவதாக வருத்தத்துடன் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா நடவடிக்கை எடுத்து ஆதாரில் திருத்தம் செய்ய உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசனூர் மலைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தின் நடுவே பல குக்கி ராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் பெரும்பாலும் சாலையிலிருந்து சுமார் 25 கிமீ தூரத்தில் உள்ளன. கல்வி, வேலைவாய்ப்புக்கு குறைந்தபட்சமாக 10 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். இந்த கிராமங்களில் வாழும் மக்களுக்கு பெரும்பாலும் கல்வி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. சிறு வயத்தில் திருமணம், இடை நிற்றல் போன்றவை இந்த பகுதியில் அதிகமாக உள்ளன.

இங்குள்ள புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்த மகேஸ் ராஜ் என்ற பெண்ணுக்கு, ஆதார் கார்டில் வயது 125 என காட்டுவதால் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆதார் கார்டை இதுவரை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்த நிலையில், தற்போது அதனை பயன்படுத்தி அரசு திட்டங்கள் பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இது குறித்து சத்தியமங்கலம் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது , வயது அடையாளத்திற்கு பள்ளி சான்றிதழ், ஊராட்சி பிறப்புப் பதிவு அவசியம் என்றும், இரண்டும் இல்லையெனில் நாங்கள் திருத்தம் செய்ய முடியாது என தெரிவித்தனர். எனவே, இந்த பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like