ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்கள்..! 10வது படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ரயில்வேயில் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் தமிழகத்தின் தெற்கு ரயில்வேயில் 2694 காலி பணியிடங்கள் இருக்கின்றன.
வயது வரம்பு; 18 முதல் 36 வரை
சம்பளம்; ரூ. 18 ஆயிரம் முதல்
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500
பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினருக்கு ரூ.250 கட்டணம்
விண்ணப்பிக்க கடைசி தேதி; பிப்.22
விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/downloads/CEN-08-2024.pdf
என்ற இணைய முகவரியில் உள்நுழைந்து அறிந்து கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் விவரங்கள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
பாண்ட்மேன் B:5 | 58 |
உதவியாளர் (Track Machine) | 799 |
உதவியாளர் (Bridge) | 301 |
டிராக் மெயிண்டனர் Gr. IV Engineering | 13,187 |
உதவியாளர் P-Way | 257 |
உதவியாளர் (C&W) | 2,587 |
உதவியாளர் TRD Electrical | 1,381 |
உதவியாளர் (S&T) S&T | 2,012 |
லோகோ செட் உதவியாளர் (Diesel) | 420 |
லோகோ செட் உதவியாளர் (Electrical) | 950 |
ஆப்ரேட்டர் உதவியாளர் (Electrical) | 744 |
உதவியாளர் TL & AC | 1041 |
உதவியாளர் TL & AC (Workshop) | 624 |
உதவியாளர் (Workshop)(Mech) | 3,077 |
மொத்தம் | 32,438 |
வயது வரம்பு
ரயில்வே குரூப்-டி பதவிகளுக்கு 01.01.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 36 வயது வரை இருக்கலாம். ரயில்வேயின் விதிமுறைகள்படி வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதன்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி
ரயில்வேயின் குரூப் - டி பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது NCVT மூலம் வழங்கப்படும் தேசிய தொழிற்பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
ரயில்வேயின் குரூப் -டி பணியிடங்களுக்கு 7வது ஊதிய பட்டியல்படி, நிலை - 1 அளவில் சம்பளம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை
ரயில்வேயின் குரூப் -டி பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடத்தப்படும். கணினி வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினல் ரூ.250 செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்
விவரம் | முக்கிய நாட்கள் |
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 23.01.2025 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 22.02.2025 |
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் | 24.02.2025 |
விண்ணப்ப திருத்த கால அவகாசம் | 25.02.2025 - 06.03.2025 |