1. Home
  2. தமிழ்நாடு

32 ஆயிரம் பெண்கள் மத மாற்றம்.. 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை..!

32 ஆயிரம் பெண்கள் மத மாற்றம்.. 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை..!

பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்து, கேரளாவை தவறாகச் சித்தரித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' என்ற படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, பத்திரிகையாளர் ஒருவர் தணிக்கைக் குழுவில் புகார் செய்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியவர், ஹிந்தி நடிகை அடா சர்மா. அத்துடன் இவர், 'சார்லி சாப்ளின் 2' படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர், சுதிப்தோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' என்ற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார்.


இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா, "என் பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன். செவிலியராக சேவை செய்ய விரும்பினேன். இப்போது பாத்திமாவாக மதமாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் சிறையில், ஐஎஸ் தீவிரவாதியாக இருக்கிறேன்.

என்னுடன் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா மற்றும் ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில், சாதாரணப் பெண்களை தீவிரவாதிகளாக மாற்றும் இந்தக் கொடிய விளையாட்டை தடுக்க யாருமில்லையா..?. இது என் கதை. 32 ஆயிரம் பெண்களின் கதை" என்று அவர் கூறுகிறார்.


இதில், பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்துள்ளதாகவும், கேரளாவை தவறாகச் சித்தரிப்பதாகவும், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழுவில், பத்திரிகையாளர் பி.ஆர்.அரவிந்தாக்‌ஷன் என்பவர் புகார் செய்துள்ளார்.

Trending News

Latest News

You May Like