மத்திய அரசில் 3,131 காலிப்பணியிடங்கள்..! +2 வகுப்பு மட்டுமே போதும்..!
மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகள், பொது துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் எஸ்எஸ்சி மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 12-ம் வகுப்பு தகுதிக்கொண்ட லோவர் டிவிசன் கிளார்க் (LDC)/ஜூனியர் செயலக உதவியாளர் (JSA), டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் (DEO), டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் (கிரேடு A) ஆகிய பதவிகள் Combined Higher Secondary (10+2) Level தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஜூன் 23 தேதி வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,131 காலிப்பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு 01.01.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 27 வரை நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.1999 தேதியில் இருந்து 01.01.2008 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
கல்வித்தகுதிநுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறையின் கீழ் உள்ள டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் கணிதம் பாடம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனை தவிர இதர துறைகளில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பள விவரம்
- லோவர் டிவிசன் கிளார்க் பதவிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
- டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையும், நிலை 5 கீழ் வரும் இடங்களுக்கு ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும்.
12-ம் வகுப்பு தகுதிக்கான எஸ்எஸ்சி தேர்வு கணினி வழியில் இரண்டு கட்டமாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஆங்கிலம், பொது அறிவு, நுண்ணறிவு மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் 100 கேள்விகள் கொண்டு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மொத்தம் 60 நிமிடங்கள் இத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) நடைபெறும். 0.50 மதிப்பெண்கள் நெகட்டிங் மார்க் வழங்கப்படும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதி பெறுவார்கள். இரண்டு கட்ட தேர்வு இரண்டு பகுதியை கொண்டு நடைபெறும். இதில் கணிதம், பொது விழிப்புணர்வு, ஆங்கிலம், கணினி திறன் தேர்வு ஆகியவை கொண்டு முதல் பகுதி தேர்வு நடைபெறும். அதே தினத்தில் இரண்டாம் பகுதியில் திறன் தேர்வு/ டைப்பிங் தேர்வு நடைபெறும். இத்தேர்வு கொள்குறி முறையில் நடைபெறும். இறுதியாக இரண்டு கட்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிட்டு, பணி நியமனம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கான விண்ணப்பம் ஜூன் 23 மாலை முதல் தொடங்கிய நிலையில், ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 19 வரை கட்டணம் செலுத்தலாம். தொடர்ந்து, ஜூலை 23 முதல் 24 வரை விண்ணப்பம் திருத்தம் செய்துகொள்ளலாம். இதற்கான முதல் கட்ட தேர்வு செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிப்ரவரி முதல் மார்ச் 2026 வரை தேர்வு நடைபெறும்.
முக்கிய நாட்கள்
| விவரம் | தேதிகள் |
| விண்ணப்பம் தொடக்கப்பட்ட நாள் | 23.06.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 18.07.2025 |
| முதல் கட்ட தேர்வு | 08.09.2025 முதல் 18.09.2025 |
| இரண்டாம் கட்ட தேர்வு | பிப்ரவரி - மார்ச் 2025 |
எஸ்எஸ்சி தேர்விற்கு மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 18003093063 எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.