1. Home
  2. தமிழ்நாடு

வரும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!!

வரும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!!

சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரையிலான 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று முதல் 9 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மருது சகோதரர்களின் நினைவு தினமும், தொடர்ந்து வரும் 27ஆம் தேதி காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்பட உள்ளது. அதைதொடர்ந்து, பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது.


வரும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!!

இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். அதனை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், வரும் 31ஆம் தேதி வரையில் சிவகங்கையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like