30 தெருநாய்கள் சுட்டுக்கொலை!!
அரசு உத்தரவிட்டதின் பேரில் பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் 30 தெருநாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
பெகுசராய் மாவட்டத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அவற்றை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
தலைநகர் பாட்னாவில் இருந்து வந்த குழுவினர் பச்வாடா, கடராபாத், அர்பா, பிகம்சாக் மற்றும் ராணி ஆகிய இடங்களில் இரண்டு நாட்களில் 30 தெருநாய்களை சுட்டுக் கொன்றனர்.
உள்ளூர் மக்கள் அந்தக் குழுவினருக்கு தெருநாய்களைக் கண்டுபிடித்து கொல்ல உதவினர். கடந்த 2022ாம் ஆண்டில், தெருநாய்களால் கிட்டத்தட்ட 10 பேர் தாக்கப்பட்டனர்.
இதை தடுக்கும் வகையில், நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கொல்ல உத்தரவிட்டது. கேரளாவிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுடன் ஒருவர் துப்பாக்கியுடன் நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கக்கூடும் என்பதால் அவர் துப்பாக்கியுடன் நடந்து சென்றார்.
newstm.in